வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகோரி நிகழ்நிலை போராட்டம்!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகோரி நிகழ்நிலை போராட்டம்!

நாட்டில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஒன்லைன் ஊடாக மனுமீதான கையெழுத்திடுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்தியநிலையத்தின் அமைப்பாளர் ம​ஹேஸ் அபேபிட்டிய தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்பினை வழங்குமாறு கோரி கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆணடு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பல்கலைக்கழங்களில் வௌியாகிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க எவ்வித செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையென்று மஹேஸ் அம்பேபிட்டிய தெரிவித்தார்.

 கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி பட்டப்படிப்பை பூர்த்தி 60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. அத்திட்டத்தினூடாக 52,589 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் தகுதி பெற்ற ஒரு தொகுதியினர் பல்வேறு குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி தொழில்வாய்ப்பு வழங்காமல் நிராகரிக்கப்பட்டது.

EPF, ETFபிரச்சினை, பல்கலைக்கழங்களில் பெறுபேறு வர தாமதித்தமை, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுடைய பிரச்சிகைள், ​பின்தங்கிய சேவை போன்ற பிரச்சினைகளுடன் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் 4 வருடங்களுக்கு மேலாக சுதேச வைத்தியத்துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தும் இதுவரை தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அப்பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வருடாந்தம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்குவதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் செலுத்தவும் நிகழ்நிலை மனு கையெழுத்து போராட்டம் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் மஹேஸ் அபேபிட்டய தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image