நாட்டில் முடக்கநிலை அறிவிக்கப்படுமா?

நாட்டில் முடக்கநிலை அறிவிக்கப்படுமா?

நாட்டில் வேகமாக கொவிட் 19 பரவி வருவதனால் நாட்டில் முடக்கநிலையை அறிவித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர குறைந்தது 4 நாட்களுக்காவது முடக்கநிலை அறிவிக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இன்று மாலை ஜனாதிபதியுடன் இடம்பெறுவுள்ள கலந்துரையாடலில் முடக்க நிலை தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அக்கலந்துரையாடலுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட துறைசார் முக்கியஸ்த்தர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கொவிட் பரவல் அபாயம் தற்போது அதிகரித்துள்ளமையினால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image