மருத்தவர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கை

மருத்தவர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கை

சுகாதாரத்துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகின்றமையின் காரணமாக பணியிலுள்ள வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனல் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் 'கிராமத்துடன் உரையாடல்' செயற்றிட்டத்தை தொடர்ந்து மருத்துவர் பற்றாக்குறை தொடர்பான தகவல்களை மாகாண ஆளுநர்கள் எமது சங்கததிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அண்மைக்காலமாக மருத்துவர்கள் நாட்டை விட்டு வௌியேறி வருகின்றமையினால் இவ்வாறு மருத்துவர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சைட்டம் பிரச்சினையுடன் ஏற்பட்ட தாமதம் இதற்கு காரணமாகும். மருத்துவ பயிற்சிப் பதிவும் இரு வருடங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் பின்தங்கிய கிராமங்களில் நிலவும் மருத்துவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான தற்காலிக தீர்வாக மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அரசாங்கத்தின் எமது சங்கம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. எனினும் இதற்கான அமைச்சரவை அனுமதி இதுவரை கிடைக்கவில்லையென அறியக்கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image