பயிலுநர் பட்டதாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

பயிலுநர் பட்டதாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

 அண்மையில் சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சார்பில் அபிவிருத்தி அதிகாரகிள் சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியாராய்ச்சி இக்கடிதத்தை செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

அனைத்து அதிகாரிகளையும் சமமாக பார்க்கப்படும் கொள்கைக்கமைய 84 வேலைநாட்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு செப்டெம்பர் 2ம் திகதி பட்டதாரி பயிலுநராக இணைக்கப்பட்டு தற்போது 42 நாட்கள் மகப்பேற்று விடுமுறையை பெற்று அக்காலம் பூர்த்தி செய்த, பூர்த்தி காலம் நெருங்கியுள்ள அதிகாரிகளுக்கு உரிய 84 நாட்கள் மகப்பேற்று விடுமுறையை வழங்கும் வகையில் 2020. செப்டெம்பர் 02ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image