தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய வீட்டுமட்ட, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சார மற்றும் நீர்க் கட்டணப் பட்டியலை செலுத்துவதற்கு சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மின்சக்தி அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாகவே அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

 இது தொடர்பாக 2021.01.18 அன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு:

03. கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கான சலுகை வழங்கல்

கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை மற்றும் தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணப் பட்டியல் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல் செலுத்துவதற்கு சலுகை வழங்குவதற்கு ஏற்புடையதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணுமாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வீட்டுமட்ட, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்களுக்கு குறித்த காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணப் பட்டியலைச் செலுத்துவதற்காக பட்டியல் திகதியிலிருந்து 06 மாதங்களுக்கு இலகு தவணைக் காலத்தை வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருத்தல்.

• தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட சினிமா திரையரங்குகளில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் திசம்பர் மாதம் வரையான மின் கட்டணப் பட்டியல், அதன் பட்டியல் திகதியிலிருந்து 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருத்தல்

• இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்களுக்காக 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை சேர்ந்துள்ள மின் கட்டணப் பட்டியல் 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருத்தல்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image