தொழில் திணைக்களம், வலய, மாவட்ட அலுவலக தொடர்பு இலக்கங்கள்

தொழில் திணைக்களம், வலய, மாவட்ட அலுவலக தொடர்பு இலக்கங்கள்

தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவும், விசாரணைகளை மேற்கொள்ளவும், நேரடி தொலைபேசி, வட்ஸ்அப், வைபர் இலக்கங்களும், மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வலய, மாவட்ட தொழில் அலுவலகங்களின் தொடர்வு விபரங்களையும் தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறித்தல்,

கொவிட்- 19 வைரஸ் தொற்றினை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழி முறைகள் மற்றும்  தொலை நிலை வேலை ஏற்பாடுகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, தொழில் திணைக்களமானது தொழில் திணைக்களத்தின் அலுவலக வலையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள தொலைத் தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி நாடு பூராகவும் உள்ள தொழில் அலுவலகங்களின் ஊடாக  பொது மக்களுக்கு தொடர்ச்சியான சேவையை வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளது. இதன் பிரகாரம், பொது மக்கள் தங்களது அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்குரித்துடைய தொழில் அலுவலகத்திற்கு தொழில் சட்டங்கள் தொடர்புடைய எந்த விடயம் சார்பாகவும் எழுத்து மூலம் முறைப்பாடு அல்லது எழுத்து மூலம் விசாரணையை மேற்கொள்ள முடியும்.

இந்நோக்கத்திற்காக,  அத்தகைய அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி - E-mail  என்பவற்றை தொழில் திணைக்களத்தின் அலுவலக வலையத் தளத்திற்குச் சென்று என்ற  இணைப்பின் ஊடாக நீங்கள்பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில்  அமைந்துள்ள   ஒவ்வொரு பிரிவிற்கும் உரிய எழுத்து மூலமான விசாரணைகளை  கீழுள்ள  அட்டவணையில் உள்ள தொடர்பு முறைகளைப் பயன்படுத்தி பொது மக்கள் செய்யமுடியும் என அறிவிக்கப்படுகிறது.

Labour_Department_Contacts.jpg

பொதுமக்களுக்கு இடைவிடாத சேவையை  வழங்கும் நோக்கில் அலுவலக நேரங்களில் அலுவலகத்திற்கு நிறைவேற்றுத் தரத்திலுள்ள அலுவலர்களுக்கு வருகின்ற உள் வரும் அழைப்புக்களை  அவர்களது கையடக்கத் தொலைபேசிக்கு  மாற்றக் கூடிய வசதிகளை தொழில் திணைக்களம் வழங்கியுள்ளது. அத்துடன் தொழில் திணைக்களத்தின் அலுவலக வலையத் தளத்திற்குச் சென்று என்ற இணைப்பின ஊடாக அத்தகைய அலுவலர்களுடன் தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் பிரகாரம், பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தயவு செய்து அலுவலகத்திற்கு வருவதனைத் தவிர்த்து அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் மு.ப. 8.30  இலிருந்து பி.ப. 4.15 மணி வரை மேலே குறிப்பிட்டுள்ள தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொழில் ஆணையாளர் நாயகம்

 தொழில் திணைக்களம்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image