மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 2 வாரங்களில் வழிகாட்டல் கோவை

மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 2 வாரங்களில் வழிகாட்டல் கோவை

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்கும் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவையை எதிர்வரும் இரண்டு வாரங்களுள் தயாரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளில் பாடசாலைகளை திறப்பதற்கான சூழ்நிலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் நடத்தபடவுள்ளது.

சுகாதார பிரிவு கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறினார்.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளை தவிர ஏனைய பகுதிகளில் 11 ஆம் தரத்திற்கு மாத்திரம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image