வௌிநாட்டு பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு

வௌிநாட்டு பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள 4960 பட்டதாரிகளை கஷ்டப்பிரதேச கல்வி, சமூக மற்றும் சமய அபிவிருத்திக்கு பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அவர்கள் பூர்த்தி செய்துள்ள விசேட துறை பட்டப்படிப்புக்கமைய அடையாளங்கண்டு அதற்கமைய கடமைகளை பொறுப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கமைய தொழில்வாய்ப்பை கோரியுள்ள வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கான நிதி இல்லையென பொது சேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். அதற்கமைய தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

வௌிநாட்டு பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளின் பின்புலம் தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காக கூகுள் விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை இம்மாதம் 24ம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்பாக பூர்த்தி செய்தல் அவசியம் என்று செயலாளர் தெரிவித்துள்ளார். அரச நிறுவன சேவைகளுக்காக மட்டுமே இத்தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image