ஹோட்டல் தனிமைப்படுத்தல்களுக்காக மூன்றாம் நபருக்கு பணம் வழங்க வேண்டாம்

ஹோட்டல் தனிமைப்படுத்தல்களுக்காக மூன்றாம் நபருக்கு பணம் வழங்க வேண்டாம்

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் போது தேவையில்லாம் பணம் அறவிடும் மூன்றாம் நபர்களை சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தலுக்கு மூன்றாம் நபருக்கு லஞ்சம் வழங்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் 19 இரண்டாம் அலை பரவ ஆரம்பித்ததையடுத்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மிக உயர்ந்த தரத்துடனும் நம்பிக்கையுடனும் முன்னெடுக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. இராணுவத்தின் இச்செயற்பாட்டினால் கட்டியெழுப்பப்பட்டுள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை எந்தவிதத்திலும் அனுமதிக்கப்போவதில்லை.

வௌிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருபவர்களுக்கு நியாயமான விலையில் தரமான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்குவதே தனது நோக்கம் என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் நிறைவேற்று அதிகாரிகளுடன் கொவிட் 19 தடுப்புக்கான தேசிய மத்திய நிலையில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே மேற்கண்டவாறு இராணுவ தளபதி கருத்து வௌியிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image