பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை

பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக பொறுப்பேற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் நேற்று (07) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தமது கேள்வியில், பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு 2005 ஆம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். இதற்கமைய 51 பெருந்தோட்ட வைத்தியசாலைகள் மாத்திரமே அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. எனினும் அதன் பின்னர் வந்த எந்தவொரு அரசாங்கமும் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகள் தோட்ட நிறுவனங்களின் கீழே உள்ளதாக வடிவேல் சுரேஷ் இதன்போது சுட்டிக்காட்டினார்

இதற்கு பதிலளித்து உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி கூட்டங்களிலும் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி கூட்டத்தில் கலந்துரையாடி அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் தேசிய சுகாதார கட்டமைப்பில் இணைப்பதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசாங்கத்திற்கு பொறுப்பேற்கப்படும். அதேபோன்று பெருந்தோட்டப்பகுதிகளில் சுகாதார துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வைத்தியசாலையொன்றுக்கு இரு வைத்தியர்கள் வீதம் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வைத்தியர்களை உருவாக்க ஐந்து வருடங்களாகும். படிப்படியாக நடவடிக்கையெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image