பட்டதாரிப் பயிலுநர்கள் நிகழ்நிலையில் தகவல்களை உள்ளீடு செய்ய காலநீடிப்பு

பட்டதாரிப் பயிலுநர்கள் நிகழ்நிலையில் தகவல்களை உள்ளீடு செய்ய காலநீடிப்பு
பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தில் நிகழ்நிலை மூலம் தகவல்களை உள்ளீடு செய்வதற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அரசசேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
 
குறித்த காலமானது இன்று (05) நள்ளிரவு 12 மணிடயுடன் நிறைவடைய இருந்தது. இந்த நிலையில் மேலும் 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆலோகபண்டாரவினால் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
 
இதுதொடர்பில் அவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
 
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் - 2019 கட்டம் II மற்றும் III நிகழ்நிலை முறையில் தகவல்களை பெற்றுக் கொள்ளல்
 
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக எனது சம இலக்க மற்றும் 2020.12.31 ஆம் திகதிய கடிதத்திற்கு மேலதிகமாக
 
அதன்படி பட்டதாரிப் பயிலுனர்களின் தகவல்களை நிகழ்நிலை முறையில் பெற்றுக்கொள்ளும் செயற்திட்டத்தின் கீழ் 12,000 வரையான பயிலுனர்கள் மட்டுமே தகவல்களை உள்ளீடு செய்துள்ளதுடன், ஏனைய பட்டதாரிகளுக்கு அத்தகவல்களை உள்ளீடு செய்வதற்கான இறுதி திகதி 2021.01.10 வரை நீடிக்கப்பட்டு உள்ளது என்பதை தயவுடன் அறியத்தருகின்றேன்.
 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அறிவித்தலை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image