ஆசிரியர்களின் கோரிக்கை அலட்சியம் செய்யும் அரசாங்கம்!

ஆசிரியர்களின் கோரிக்கை அலட்சியம் செய்யும் அரசாங்கம்!

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து தீர்வுகாணுமாறு ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட  வேண்டுகோளை அரசாங்கம் அலட்சியம் செய்வதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

   கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதற்கு முன்னதாகவே ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் கேட்டிருந்த போதிலும் அந்த கோரிக்கையை அரசாங்கம் கிடப்பில் போட்டுவிட்டது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  2021  பாதீட்டில் ஆசிரியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதாக  முன்னைய கல்வியமைச்சர்  டலஸ் அழகப்பெருமவும் தற்போதைய கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸும் உறுதியளித்திருந்தார்கள்.

ஆனால் பாதீட்டில் அது கவனத்தில் எடுக்கப்படவேயில்லை என்றும் முன்னாள் அமைச்சர் றிச்சர்ட் பத்திரன 1994 ஆம் ஆண்டில் செய்த விதப்புரைகளின பிரகாரம் ஆசிரியர்களின் சம்பளங்களை மீளாய்வு  செய்து  சம்பள முரண்பாடுகளை சீர்செய்யுமாறு தாங்கள் கோருவதாகவும்  ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image