பிசிஆர் செய்தவர்களால் ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா

பிசிஆர் செய்தவர்களால் ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா

பிசிஆர் பரிசோதனை செய்யச் சென்ற பிரபல தனியார் மருத்துவமனை ஊழியர் மூலமாக 7 நட்சத்திர ஹோட்டல் ஊழியருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் நட்டஈடு வழங்கி விடயம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஹோட்டல் ஊழியர் ஒருவர் கடந்த 22ம் திகதி கொவிட் 19 தொற்று காரணமாக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த 7 நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு பிசிஆர் பரிசோதனைக்காக வருகைத் தந்த தனியார் மருத்துவமனை ஊழியர் குழாமில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்தமை 21ம் திகதி நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டது எவ்வாறு என்பது குறித்து ஹோட்டல் முகாமை ஆராய்ந்து பார்த்தபோது பிசிஆர் பரிசோதனை குழாம் வேறொரு இடத்தில் கொவிட் தொற்றாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு பின்னர் ஹோட்டலுக்கு வருகைத் தந்தமை தெரியவந்துள்ளது. இதனால் தமது ஊழியருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஹோட்டல் முகாமை கண்டறிந்ததையடுத்து குறித்த தனியார் வைத்தியசாலை நிர்வாகம் நட்டஈடு வழங்கி விடயத்தை வௌியிடாமல் பார்த்துக்கொண்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image