அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.20,000 வேண்டும் - நிதியமைச்சிற்கு செல்லும் தொழிற்சங்கங்கள்

அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.20,000 வேண்டும் - நிதியமைச்சிற்கு செல்லும் தொழிற்சங்கங்கள்

வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.20,000  வேண்டும் வழங்க வேண்டும் எனக் கோரி தொழிற்சங்கங்கள் நிதி அமைச்சை நாடுகின்றன.

இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.20 000/- சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் 13 க்குப் பிறகு, அனைத்து உழைக்கும் மக்களும் குறைந்தபட்சம் 20 000/- சம்பள உயர்வு கோரிக்கையில் வெற்றிபெற வீதியில் இறங்குவோம், இது தொடர்பாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடமும், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மீண்டும் எழுத்து மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

இதற்காக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்க ஒன்றியத்தின் தலைவர்கள், இன்று நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், விவசாய ஆலோசகர்கள், அலுவலக சேவை உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் உட்பட பல சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர்கள் இன்று (06) நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்து, தாங்கள் தயாரித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மீண்டும் வழங்கவுள்ளனர். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image