இலங்கையில் கொவிட்-19 தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

இலங்கையில் கொவிட்-19 தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

இன்றைய தினம் நாட்டில் 692 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று தொற்று உறுதியானவர்களில் 585 பேர் பேலியகொடை கொத்தணியிலும், இரண்டு பேர் சிறைச்சாலை கொத்தணியிலும் பதிவாகியுள்ளனர்.

5 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியவர்களாவர். அவர்களில் 4 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும், ஒருவர் கத்தாரில் இருந்தும் நாடுதிரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 50 ஆயிரத்து 229 பேருக்கு மொத்தமாக கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அதேநேரம் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 646 பேர் இன்று குணமடைந்தனர். இதையடுத்து, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 43,267 ஆக அதிகரித்துள்ளது என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 715 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கொவிட்-19 தொற்றினால் இன்றைய தினம் நாட்டில் 3 மரணங்கள் பதிவாகின. இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களில் மொத்த எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image