ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் மேலும் 16 பேருக்கு கொரோனா

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் மேலும் 16 பேருக்கு கொரோனா

வட்டவளையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அங்கு தொழில் புரிந்தவர்களிடம் பி.சி.ஆர் மற்றும் ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (27) வெளியாகின. இதில் மேலும் 16 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 57 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ, கினிகத்தேனை, பலன்தொட, வட்டவளை, டெம்பல்ஸ்டோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image