மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தாமையினால் 1,888 மில். ரூபா நிலுவைத் தொகையை பெற முடியாத தோட்டத் தொழிலாளர்கள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தாமையினால் 1,888 மில். ரூபா நிலுவைத் தொகையை பெற முடியாத தோட்டத் தொழிலாளர்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்று இல்லாத காரணத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமான 1,888 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை பெற முடியாதுள்ளது.

 ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) மற்றும் எல்கடுவ பிளான்டேஷன்ஸ் லிமிடெட் ஆகிய பெருந்தோட்டத்துறை கம்பனிகளின் கீழ் பணியாற்றியபோது பாதிக்கப்பட்ட 12,000 தொழிலாளர்களில் சிலரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட் ட விசாரணைகளையடுத்து முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையில்லாமையே இதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹினி முனசிங்க, நீண்டகாலமாக நிலவி வரும் குறித்த பிரச்சினை தொடர்பிற்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் கடந்த வாரம் இடம்பெற்றது. மார்ச் 23 இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு மூன்று தோட்டக் கம்பனிகளுக்கும் அழைப்பு விடுத்தபோதிலும் ஜனதா தோட்ட அபிவிருத்திச்சபை சிரேஷ்ட அதிகாரிகள் உரிய அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் கலந்துகொண்டிருந்தனர் என்று த ஐலண்ட் பத்திரிகைக்கு அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத்துள்ளதாக அப்பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் மத்திய வங்கிக்கு அனுப்பப்படவில்லை என்றும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணிக்கொடையும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விவகாரம் தொடர்பான அசல் முறைப்பாடு கடந்த 2013ம் ஆண்டு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இறுதியளவில் குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டபோதிலும் பொறுப்புக்குரியவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போதைய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ரமணி முத்தேடுவேகம, H. கசாலி ஹுசைன் ஆகியோர் கையெழுத்திட்ட ஆணைக்குழு ஆவணத்திற்கமைய ,ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபைதொழிலாளர்களுக்கு 885 மில்லியன் ரூபாவும் , இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் 664 மில்லியன் ரூபாவும் எல்கடுவ பிளான்டேஷன்ஸ் 339 மில்லியன் ரூபாவும் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியுள்ளது..

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, தொழில் அமைச்சு, நிதியமைச்சு, பொது நிறுவன மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி ஆகியன ஏனைய பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிந்துரைகள் தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டாலும், தொழிலாளர்களின் அவலநிலை குறித்து அமைச்சுக்கள் கண்மூடித்தனமாக உள்ளன என்று மனித உரிமை ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை, தனது முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுடைய நிலுவைத தொகையை முழுமையான எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி அல்லது அதற்கு முன்னர் முழுமையாக செலுத்துவதாக உறுதிமொழியை வழங்கியுள்ளது. எனினும் ஏனைய இரு தோட்டக் கம்பனிகளும் அவற்றின் நிலைப்பாட்டை இதுவரை வழங்கவில்லை. சந்திப்பிற்கு வருகைத் தராத மனித உரிமைகள் ஆணைக்குழு விரைவில் ஏனைய இரு தோட்டக் கம்பனிகளுடன் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, தொழிலாளர் அமைச்சு, நிதி அமைச்சு, பொது நிறுவன மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி ஆகியன தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை கையால்வதில் மந்தநிலை காணப்படுகின்றமையினால் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குறிப்பிட்ட பரிந்துரைகள் / அறிவுறுத்தல்கள் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிரமாக தொட விரும்புகிறது என்று ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி - திவயின - 27.03.2022

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image