தொழிற்சங்க உறுப்புரிமையால் கிடைக்கும் தொழிலாளர் வரப்பிரசாதங்கள்

தொழிற்சங்க உறுப்புரிமையால் கிடைக்கும் தொழிலாளர் வரப்பிரசாதங்கள்

இன்று பல தொழிலாளர்கள் தொழிற்சங்க மயமாக்கல் மற்றும் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி அறியாமல் உள்ளனர், இதற்கு முக்கிய காரணம் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் பேரணிகள், போராட்டங்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகளாகவே காணப்படுகின்றமையேயாகும்.

ஆனால், தொழிற்சங்க மயமாக்கல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படை சட்ட உரிமை என்பதை ஊழியர்கள் அறிந்து கொள்ள வேண்டும், எனவே தொழிற்சங்க மயமாக்கல் உரிமையை ஒருபோதும் குறைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

01. கேள்வி - தொழிற்சங்கம் என்பதன் மூலம் அர்த்தப்படுவது யாது?

பதில்

தொழிற்சங்கம் என்பது ஊழியர்கள் அல்லது தொழில் வழங்குநருக்கு இடையே, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக, பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோக்கங்களை அடைவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சங்கம் அல்லது அமைப்பாகும்.

தொழிற்சங்கத்தை உருவாக்குவதன் நோக்கங்கள்:

1. தொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குநருக்கு இடையில் அல்லது தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையில் அல்லது

2. தொழில் வழங்குநருக்கும், தொழில் வழங்குநருக்கும் இடையே இருக்கும் உறவை முறைப்படுத்துதல்.

3. சில நிபந்தனைகளை விதித்து ஒரு தொழில் அல்லது வணிகத்தினை கட்டுப்படுத்தல்.

4. ஒரு தொழிலில் வேலைநிறுத்தம் அல்லது தொழில் நிலையங்கள் மூடப்படல் அல்லது நிதி நிவாரணம் வழங்குதல் மற்றும் வேலைநிறுத்தங்களின் போது அதன் உறுப்பினர்களுக்கு வேதனம் அல்லது பிற நிதி உதவிகளை வழங்குதல்.

 

02. கேள்வி – தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் செய்துகொண்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் என்ன?

பதில்

சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் எப்போதும் ஒரு சட்ட ரீதியான அமைப்பைக் கொண்டதாகும். அத்தகைய தொழிற்சங்கம் எப்போதும் பணியாளர்களின் நலனுக்காக தொழில் வழங்குநருடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும். இது கூட்டு ஒப்பந்தம் எனப்படும்.

அதன்படி, ஒரு கூட்டு ஒப்பந்தம் எனப்படுவது ஒரு தொழில் தருநர் அல்லது தொழில் தருநர்கள், ஒரு ஊழியர் அல்லது ஒரு தொழிற்சங்கம் அல்லது ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் ஆகியவற்றுக்கு இடையில் செய்துக்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும்.

கூட்டு ஒப்பந்தத்தின் நன்மைகள்:

ஒரு தொழிலாளரின் தொழில் நிலைமைகள் மற்றும் விதிமுறைகளை முறைப்படுத்துதல்

சம்பந்தப்பட்ட தரப்பினரின் உரிமைகள் அல்லது கடமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்தல்

தொழில்துறை மோதலைத் தீர்ப்பதற்கான நடைமுறையைத் தீர்மானித்தல்

இவ்வாறு தரப்பினரிடையே செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் நகலை தொழில் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த ஒப்பந்தம் குறித்து தொழிலாளர் ஆணையர் திருப்தி அடைந்ததும், அதனை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கிறார். ஒப்பந்தம் வர்த்தமானியில் வெளியிடப்படும் வரை ஒப்பந்தத்தின் விதிமுறைகள் எந்தவொரு பணியாளருக்கும் பொருந்தாது. ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடியே ஒப்பந்தம் செல்லுபடியாகும். இல்லையெனில், வெளியீட்டின் திகதியைக் கவனிக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் எவ்வளவு காலம் செல்லுபடியாகும் என்பதையும் ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும், இந்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க அந்தத் தரப்புகள் இதன்மூலம் கடமைப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையே முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தொழில் பணிக்குகளை பெருமளவு குறைக்க முடியும். இது குறித்த தரப்புகள் கூட்டாக பேரம் பேசும் உரிமையை வழங்குகிறது.

03.கேள்வி

தொழிற்சங்க பேரம்பேசல் என்றால் என்ன?

பதில்

தொழிற்சங்க செயல்பாடு என்பது தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அனைத்து தொழிலாளர் செயல்முறைகளின் வெற்றியின் முக்கிய அங்கமாகும். முதலீட்டாளர்களுடன் செய்துகொள்ளும் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் ஊழியர்களின் கூட்டு உடன்படிக்கையின் சக்தி மேம்படுத்தப்படுகிறது. அதாவது அரசியல் நலன்களைக் காட்டிலும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைக்கப்பட்டால், இந்தக் கூட்டு உடன்படிக்கை மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை வென்றெடுப்பது அவ்வளவு கடினமானது அல்ல.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இலங்கையில் 87 சம்வாயத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் இது நன்கு விளக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு உடன்படிக்கை தொழில்துறை பிரச்சினைகளை எளிதாக தீர்க்க உதவுகிறது. அதன்படி,

1. சர்ச்சையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்தல்
2. இரு தரப்பினரிடையே மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டுதல்
3. இரு தரப்புகளின் பங்கேற்புடனான பேச்சுவார்த்தைகள்
4. சர்ச்சை தீர்வு பெரும்பாலும் தொழிற்சங்கங்களால் மத்தியஸ்தம் செய்யப்படுகிறது
5. அங்கத்துவ கூட்டு நடவடிக்கைகள்
6. இரு தரப்பினருக்கு இடையிலான உறவின் அடிப்படையில் தொடர்புடைய தயாரிப்புக்கு மதிப்பளிக்கும் திறன்
7. தொழிற்சங்க உறுப்பினர்களை அதிகரிக்கும் திறன்
8. தொழில்துறை உறவுகளை மேம்படுத்தும் திறன்

இந்த கூட்டு உடன்படிக்கை தேசிய, தொழில்துறை மற்றும் நிறுவன மட்டங்களில் செய்யப்படலாம்.

04. கேள்வி

நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகள் (Unfair labor practices) என்றால் என்ன?

பதில்:

தொழில் பிணக்குகள் திருத்தச் சட்டம் 1999இன் 56ஆம் இலக்க கூற்று நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளை விளக்குகிறது. அவை:

1. ஒரு தொழில் தருநர் ஒரு பணியாளரை பணியமர்த்தும்போது ஒரு தொழிற்சங்கத்தில் இணைவதைத் தடுப்பது

2. ஒரு பணியாளரை ஆட்சேர்ப்பு செய்யும்போது தொழிற்சங்க உறுப்புரிமையிலிருந்து விலகுமாறு தொழில் தருநர் கோருதல்.

3. வெளிப்படையான காரணமின்றி ஒரு தொழிற்சங்க உறுப்பினரை தொழில் தருநர் பணிநீக்கம் செய்தல்

4. தொழிற்சங்கத்தின் உறுப்பினரை நீக்குவதற்கு எந்தவிதமான செல்வாக்கையும் பிரயோகித்தல்

5. பணியாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைவதையும் ஆதரிப்பதையும் தடுத்தல்

6. தொழிற்சங்க நடவடிக்கைகளில் தொழில் தருநர்களின் தேவையற்ற தலையீடு

7. தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தல் என்பனவாகும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image