இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் உடல்ரீதியான பாதிப்பு முதல் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் வரையிலான வன்முறைகளை அனுபவிக்கின்றனர்.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயல்முனைவுக்கு அமைய Promoting Positive Information in Sri Lanka PRO INFO பேஸ்புக் பக்கத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பான பொறுப்பான அறிக்கையிடல் குறித்து வெளியிடப்பட்டுள்ள விழிப்புணர்வு தகவல்கள்.
மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு உலகளாவிய பிரச்சினையான பெண்களுக்கு எதிரான வன்முறை பல வடிவங்களில் இடம்பெறுகிறது. இது பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் சமூக நெறிமுறைகள் மற்றும் ஊடக நடைமுறைகளால் தூண்டப்படுகிறது.
பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக 16 நாட்கள் செயல்பாட்டின் (activism) மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மரியாதைக்குரிய மற்றும் பொறுப்பான அறிக்கையிடலுக்காக முன்னிற்பதுடன் வன்முறையை எதிர்கொண்டவர்களை சக்தியூட்டுவோம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எமக்கு இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களின் வலிமையையும் அதிலிருந்து மீளும்தன்மையையும் பிரதிபலிக்கும் படங்களைப் பயன்படுத்தி அவர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் விதமாக பாலியல் வன்முறைகள் குறித்த பொறுப்பான அறிக்கையிடலுக்காக முன்னிற்போம்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் அறிக்கையிடும் போது பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்டுவது தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு ஆதரவளிப்போம். பொறுப்பான அறிக்கையிடலில் குற்றவாளியின் செயல்கள் மற்றும் பொறுப்புணர்வை வலியுறுத்துவதன் மூலம் அவர் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் கண்ணியத்தை வழங்கவும் உதவுகிறது.
பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பாக அறிக்கையிடும் போது பால்நிலை-உணர்திறன்மிக்க அறிக்கையிடளுக்கு ஆதரவளிப்போம்.
உணர்திறனுக்கு முன்னுரிமை அளிக்கவும்: உணர்ச்சிகரமான உள்ளடக்கத்திற்கு தங்களை தயார்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் முகங்கொடுத்த அதிர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கு பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்க எச்சரிக்கைகளைப் பயன்படுத்தவும்.
பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை நேர்காணல்களுக்கு முன் அவர்கள் முழுமையாக அறிந்திருப்பதை உறுதிசெய்து, அவர்களிடம் தகவலறிந்த ஒப்புதலைப் பெற்று, அவர்களின் மரியாதைக்கு முன்னுரிமையளித்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான நெறிமுறையான ஊடக அறிக்கையிடளுக்கு நாம் ஆதரவளிப்போம்.
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் மற்றும் நிபுணர் வழிகாட்டுதலை உள்ளடக்கிய அறிக்கையிடல் நடைமுறைகளுக்கு ஆதரவளிப்போம். அறிக்கைகள் நெறிமுறையானது, உணர்திறன்மிக்கது மற்றும் பால்நிலைகளுக்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்த பால்நிலை சார்ந்த வன்முறை குறித்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்.
பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்டவர்கள் பற்றிய சரியான அறிக்கையிடலுக்கு ஆதரவளிப்போம். பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்டவர்களின் கதைகளைப் பகிரும் போது, பாதிக்கப்பட்டவர்கள் தேவையான கவனிப்பு மற்றும் வளங்களை பெற உதவும் விதமாக உள்ளூர் ஆதரவு சேவை அமைப்புக்களின் தகவல்களை அவர்களது சம்மதத்துடன் உள்ளடக்கவும்.
குற்றவாளிகளின் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்பை வலியுறுத்தி அறிக்கைகளில் அவர்களை தெளிவாக அடையாளம் காட்டுவதன் மூலம் பொறுப்புக்கூறலுக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யவும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தேசிய அல்லது உலகளாவிய புள்ளிவிவரங்களை உள்ளடக்கி விரிவான கண்ணோட்டத்தையும் சூழ்நிலையையும் வழங்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான நெறிமுறையான மற்றும் முழுமையான அறிக்கையிடளுக்கு ஆதரவளிப்போம்.
மாதவிடாய் வறுமையை நிவர்த்தி செய்வதற்காக அதனை பால்நிலை அடிப்படையிலான வன்முறை கண்ணோட்டத்தில் அறிக்கையிடுவததை ஆதரவளிப்போம். மாதவிடாய் வறுமை பொருளாதார பாதிப்பை அதிகரிக்கிறது, கல்வியை கட்டுப்படுத்துகிறது மற்றும் தன்னுரிமையை கட்டுப்படுத்துகிறது இதனால் பெண்கள் மற்றும் சிறுமிகளை எளிதில் வன்முறைக்கு ஆளாக்குகிறது. அதன் பரந்த தாக்கத்தை முன்னிலைப்படுத்தி அது உருவாக்கும் சார்பு சுழற்சிகளை உடைத்தெறிவோம்.
பெண்களுக்கு எதிரான வன்முறையான பணியிடத் துன்புறுத்தலுக்கு எதிராக குரல்கொடுப்போம். இலங்கை உட்பட மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் பணியிட துன்புறுத்தலுக்கு எதிராக போதியளவு சட்டங்கள் இல்லை. இதனால் மில்லியன் கணக்கான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பரந்தளவிலான பால்நிலை அடிப்படையிலான அதிகார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அமைப்பு ரீதியான பாகுபாடுகள் இதனை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை முன்னிலைப்படுத்தவும். பெண்களைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பான பணியிடங்களை உறுதி செய்வதற்கும் வலுவான கொள்கைகளை உருவாக்க ஆதரவளிப்போம்.
பெருந்தோட்டத்துறையில் உள்ள பெண்கள் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் வன்முறை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். வேலையில் பாதுகாப்பான நிலைமைகள் மற்றும் நியாயமான உரிமைகளுக்காக போராடுவதில் அவர்களின் வலிமையை முன்னிலைப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் காணப்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையில் கவனம் செலுத்துவோம்.
பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்பது பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் கடுமையான வடிவம் மற்றும் மனித உரிமை மீறலுமாகும். இதனால் இலங்கை உட்பட உலகளவில் மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுகின்றனர். அதன் தாக்கத்தை வெளிக்கொண்டுவரவும், பொறுப்புக்கூறலைக் கோரவும் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் மற்றும் நிபுணர் கருத்துக்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.