வெப்பம், தூசுடன் கூடிய காற்று- UAE காலநிலை

வெப்பம், தூசுடன் கூடிய காற்று- UAE காலநிலை

வார இறுதி நாட்களில் தூசுடன் கூடிய காலநிலை ஏற்படும் சாத்தியம் காணப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சிய தேசிய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் நாட்டின் பல பாகங்களில் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையில் தூசுடன் கூடிய காலநிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வட மேற்காக காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும் சாத்தியமிருப்பதால் தூசுடன் மணலும் சேர்ந்த பரவுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றமையினால் பொது மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணல் கலந்து தூசு காற்றுடன் பரவும் சாத்தியம் உள்ளமையினால் சுமார் இரண்டாயிரம் மீற்றர் வரையான தூரம் மறைக்கும் சாத்தியம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரக்னா, அல்அயின் ஆகிய பிரதேசங்களில் இன்று காலை ஆகக்குறைந்த வெப்பநிலையாக 23.1 செல்சியஸாக காணப்பட்டது. இவ்வெப்பநிலையானது நாளை (19) அதிகரிக்கக்கூடும் என்றும் ஆகக்கூடிய வெப்பநிலையாக 46 செல்ஸிஸை எதிர்பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image