சிவப்புப் பட்டியிலில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் இரு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிருந்தால் ஐக்கிய அரபு இராச்சிய நுழைய முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக இலங்கை உட்பட 6 ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இவ்வறிவிப்பு வௌியாகியுள்ளது.
கொவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு இராச்சிய வதிவிட அனுமதி வைத்திருக்கும் பயணிகள் ஆகஸ்ட் 5ம் திகதி முதல் முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும். இதற்காக அவர்கள் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த விலக்குகள் பொருந்தும்.
தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்த விலக்குகளின் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.