வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யுவதற்கான வாய்ப்பினை சவுதி அரேபியா வழங்கியுள்ளது.
அந்நாட்டில் இணையதளமான அப்சர் (Absher) தளத்திற்கு விஜயம் செய்து மேன் முறையீடு செய்யலாம். அம்முறையீடு மீள்பரிசீனை செய்யப்பட்டு தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருப்பின் அபராதம் நீக்கப்படும். சரியான தகவலாக இருப்பின் அபராதத்தை செலுத்துமாறு வலியுறுத்தப்படும்.
இந்நிலையில், வேண்டுமென்றே இத்தளத்துக்கு விஜயம் செய்து போக்குவரத்து அபராத்தை நீக்க முயற்சிப்போருடைக்கு சேவை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அத்தளத்திற்குள் சென்றால் request ஒப்ஷன் நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.