கடந்த பத்தாண்டுகளில் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டாரில் உயிரிழப்பு

கடந்த பத்தாண்டுகளில் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டாரில் உயிரிழப்பு

கட்டாரில் பணியாற்றிய சுமார் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த 10 வருட காலத்துக்குள் இறந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று த கார்டியன் செய்தி வௌியிட்டுள்ளது.

2010 டிசம்பர் தொடக்கம் 2020 டிசம்பர் வரையான காலப்பகுதியை நோக்கின் வாரத்திற்கு 12 பேர் என்ற வகையில் மேற்குறிப்பிட்ட 5 ஆசிய நாடுகளைச் ​சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

2011 - 2020 வரையான காலப்பகுதியில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பெறப்பட்ட தரவுகளுக்கமைய 5,927 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

2010 - 2020 வரையான காலப்பகுதியில் 824 பாகிஸ்தானியர்கள் கட்டாரில் உயிரிழந்துள்ளனர்.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் உலக காற்பந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image