இஸ்ரேலில் பராமரிப்பு ஊழியராக (care givers) வாய்ப்பு

இஸ்ரேலில் பராமரிப்பு ஊழியராக (care givers) வாய்ப்பு

பராமரிப்புப் சேவை ஊழியர்களாக (care givers) வௌிநாடுகளில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை வௌியாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் 22 - 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தில் பராமரிப்புப் பணிக்கான கற்கை நெறியை பூர்த்தி செய்த பெண்கள் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம்.

இலங்கை வெளிநாட்டுப் பணியத்தின் 0112 789 367 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இஸ்ரேலுக்கான பராமரிப்புப் பணிச்சேவைக்கான ஆட்சேர்ப்பு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் மாத்திரமே இடம்பெறும் என்பதை கவனத்திற்கொள்க

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image