வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டவர் கைது

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுப்பட்டவர் கைது

இத்தாலி மற்றும் ருமேனியாவில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று புதன்கிழமை (22) கண்டி, தலத்துஓயா  பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வங்கி கணக்கிலிருந்து பல இலட்சம் ரூபா பணத்தை சந்தேகநபர் மாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபரொருவரினால் தலத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனை அடுத்து சந்தேகநபர் வசித்து வந்த மயிலபிட்டி  பிரதேசத்தில் உள்ள வீட்டை சோதனையிட்ட போது 346,480 ரூபா பணம் மற்றும்  பல போலி ஆவணங்களும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image