புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம்

புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம்

2024ஆம் ஆண்டுக்கு ஏற்புடையதாக வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நவம்பர் மாதம்  ஆரம்பித்துள்ளதுடன் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. 

இந்த புலமைப்பரிசில் வழக்குவது தொடர்பில் பாடசாலை மட்டத்தில் புலம்பெயர் இலங்கையர்களின் பிள்ளைகளை அறிவுறுத்த பாடசாலை அதிபர்கள் இதுதொடர்பில் கவனம் செலுத்துமாறும் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்படுவது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துவிட்டு தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை பெற்றோர்களின் பிள்ளைகளுக்காகும். குறித்த புலமைப்பரிசில் மூன்று குழுக்களாக வழங்கிவைக்கப்படுகிறது.

அதன் பிரகாரம்  5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 25ஆயிரம் ரூபாவும் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு 30ஆயிரம் ரூபாவும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ள அல்லது வேறு பாடநெறிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தகுதி பெற்றுள்ள பிள்ளைகளுக்கு 40ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியும். புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ள பிள்ளைகள் www.slbfe.lk என்ற இணைத்தலத்துக்கு சென்று விண்ணப்பித்து இந்த பெருமதிமிக்க சந்தர்ப்பத்தை அடைந்துகொள்ளுமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது. இதுதொடர்பான மேலதிக தகவல்களை 0112365471 என்ற தொலைபசி வழியாக அல்லது www.slbfe.lk என்ற பணியகத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.

அறிவித்தல்

விண்ணப்பப்படிவம்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image