நியுசிலாந்து செல்ல விரும்புவோருக்கு தகவல் அறிய வளநிலையம்

நியுசிலாந்து செல்ல விரும்புவோருக்கு தகவல் அறிய வளநிலையம்

நியுசிலாந்தில் தற்போது நிலவும் தொழில்வாய்ப்புகள், அவசியமான தகமைகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஏனைய புலம்பெயர் விபரங்கள் பெறக்கூடிய வளநிலையமொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதாக இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Edward Appleton தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடலில் இவ்வாறு அவர் உறுதியளித்துள்ளார்.

நியுசிலாந்துக்கு புலம்பெயர் பெரும்பால இலங்கையர்கள் முயற்சி செய்து வரும் நிலையில் சுற்றுலா வீசாவுக்கும் பலர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் புலம்பெயர மற்றும் சுற்றுலா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு அவசியமான தகவல்களை பெறும் வகையில் இவ்வள நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியூசிலாந்தின் பொருளாதார மேம்பாட்டு உத்திகள், நாட்டின் வளர்ச்சிக்கு அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, தொழிலாளர் சட்டம், தொழிற்சங்கங்களை எவ்வாறு கையாள்வது, நாட்டின் வளர்ச்சி திசையில் அனைத்து தரப்பினரும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவை எவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை இளைஞர்களுக்கு நியூசிலாந்தில் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பை வழங்குவது தொடர்பாக தொழில் அமைச்சர் உயர்ஸ்தானிகருடைய கவனத்துக்கு கொண்டு வந்தார்.

பெரும் தொகையை வசூலித்து நியூசிலாந்துக்கு விசா தருவதாக கூறி, சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி ஆட்கடத்தற்காரர்கள் செய்யும் கடுமையான மோசடிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image