ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் நேற்று ட்விட்டரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
 
அதில் கூறியுள்ளதன்படி, எக்ஸ்போ 2020 டுபாய் ஷேக் முகமது தலைமையில் ஐக்கிய அரபு இராசசிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
 
அதில்,  ஓய்வுபெற்ற வெளிநாட்டவர்களுக்கு (Retired expars) வதிவிட விசா (Residence Visa) வழங்குவதற்கான நிபந்தனைகள்  அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
இதன்கீழ், வெளிநாட்டவர்கள் ஓய்வுபெற்ற பிறகு இப்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கலாம். இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீதிகளில் சாரதிகள் இல்லாமல் சுயமாக ஓடும் வாகனங்களை (Selfdriving vehicle) சோதனை செய்ய உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த முன்மொழிவுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
மூலம் - கலீஜ்தமிழ்
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image