இலங்கை உட்பட பல நாடுகளுக்கான தடை யை நீக்கியது பிலிப்பைன்ஸ்

இலங்கை உட்பட பல நாடுகளுக்கான தடை யை நீக்கியது பிலிப்பைன்ஸ்

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை உட்பட பல நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு பயணிகள் வருகைத் தருவதற்கு பிலிப்பைன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்தது. இந்நிலையில் டெல்டா திரிபு வைரஸ் பரவல் வேகமாக பரவ அதிகரித்ததையடுத்து கடந்த ஜூலை மாதம் மேலும் பல நாடுகளில் இருந்து பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அத்தடை எதிர்வரும் திங்கட் கிழமை (6) நீக்க அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டியூட்டர் தீர்மானித்துள்ளார் என்று ஜனாதிபதி பேச்சாளர் ஹர்ரி ரோக் நேற்று (04) அறிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்த பிலிப்பைனுக்கு வருகைத் தர முடியும் என்றும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் ஜனாதிபதி பேச்சாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image