பிரித்தானியாவில் முகக்கவசம் விரைவில் நீக்கப்படும் - பிரதமர் நம்பிக்கை

பிரித்தானியாவில் முகக்கவசம் விரைவில் நீக்கப்படும் - பிரதமர் நம்பிக்கை

பிரித்தானியாவில் தற்போது நடைமுறையிலுள்ள பல கொவிட் 19 தடுப்பு விதிமுறைகள் விரைவில் தளர்த்தப்படும் என தாம் நம்புவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

வெளியிடங்களில் முகக்கவசம் அணிவது விரைவில் தளர்த்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றான பிரித்தானியா முறையாக தடுப்பூசி வழங்கல் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தியமையினால் தற்போது அங்கு கொரொனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் பிரதமர் இவ்வாறு நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

எதிர்வரும் 19ம் திகதியுடன் முகக்கவசம் அணியவேண்டிய தேவையிருக்காது என்றும் தனியார் வீடுகளில் 6 பேர் மாத்திரம் தங்கியிருப்பது மற்றும் கடந்த 16 மாதங்களாக நடைமுறையில் இருந்த வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை என்பன நிறைவுக்கு வரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகக்கவசம் அணிவது சட்டப்பூர்வமாக நீக்கப்பட்டாலும் தாம் தொடர்ந்தும் சன நெருக்கடியுள்ள பொதுவிடங்களில் அணிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுத் தரவுகள் இம்மாதம் 12ம் திகதி ஆய்வு செய்யப்பட்ட பின்னர் தீர்மானம் எட்டப்படும் என்றும் பாடசாலை பாதுகாப்பு குமிழி முறை, பயணங்கள் மற்றும் சுய தனிமைப்படுத்தல் என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image