தனிமைப்படுத்தப்பட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் மீது தாக்குதல்

தனிமைப்படுத்தப்பட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் மீது தாக்குதல்

பெந்தோட்டை எகோ சர்வ் ஹோட்டலில் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சம்பத் எதிரிசிங்க என்ற நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்காக அவர் 290,000 ரூபா செலுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் வழங்கவேண்டிய அடிப்படை வசதிகள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தையடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அவருடைய காது பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் இத்தாக்குல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான சம்பத் எதிரிசிங்க நாகொட வைத்தியசாலையில் 17வது வாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இத்தாக்குதல் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் பாதுகாப்பு கமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளமையினால் தாக்குதல் நடத்தப்பட்டமை பதிவாகியுள்ளது. அதனூடாக விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

 

படம் - லங்கா ட்ருத்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image