புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் பணிகளில் ஐக்கிய மக்கள் சக்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் பணிகளில் ஐக்கிய மக்கள் சக்தி

புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் செயற்றிறன் மிக்க திட்டத்தை செயற்படுத்த அரசு தவறினால் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்பட எமது கட்சி தயாராகவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வரல் மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அதற்கமைய அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தனிமைப்படுத்தல் நிலையங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. அதற்கான இயலுமை எமக்குள்ளது. இவ்விடயம் தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளை வழங்குமாறு கோரி நாம் மார்ச் மாதம் 19ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளோம். இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களையும் வௌிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்களையும் அரசாங்கம் வேறு விதமாக கவனிக்கிறது. அதே போன்று அனைத்து இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களையும் அரசாங்கம் கவனிக்கவேண்டும். வௌிநாட்டு மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்கள் எவ்வித தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக நடமாட முடியும்.

வௌிநாட்டு பணியாளர்களுக்கு உதவி வழங்குவதற்கான திட்டமொன்றினை டுபாய் செல்லாமல் நாமல் ராஜபக்‌ஷ ஆரம்பிக்க வேண்டும். வீசா காலம் நிறைவடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட இலங்கைத் தொழிலாளர்களின் விபரங்களை சேகரித்து வழங்குமாறு அவர் வௌிநாட்டு தூதரகங்களுக்கு உத்தவிடவேண்டும் என்றும் ஹெக்டர் அப்புஹாமி இதன்போது தெரவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image