பிரான்ஸ் செல்கிறீர்களா? 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு தயாராகுங்கள்
தமது நாட்டுக்கு வருகைத் தரும் இலங்கை உட்பட 8 நாடுகளின் பிரஜைகள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த பிரான்ஸ் உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இலங்கை, பங்களாதேஷ், துருக்கி, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து பிரான்ஸ் வருகைத் தருபவர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கட்டாய தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கனவே, பிரேசில், ஆர்ஜன்டீனா, சிலி, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பிரான்ஸ் வருகைத் தருவோருக்கு கட்டாய தனிமைப்படுத்தலை பிரான்ஸ் அறிவித்திருந்தது.
புதிய கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கவனயீனமாகவோ இலகுவாகவோ நினைக்க முடியாத சூழ்நிலையில் இப்பட்டியலில் மேலும் பல நாடுகள் இணைக்கப்படும் என்று பிரான்ஸ் அரசாங்க பேச்சாளர் கெப்ரியல் அட்டால் தெரிவித்துள்ளார்.