புதிய அரசாங்கத்தின் கீழ் அழைக்கப்பட்டிருந்த NLAC கூட்டம் பிற்போடப்பட்டது
நாளை (12) நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் (NLAC) கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை நாளை (12) தொழில் அமைச்சரின் பங்கேற்புடன் கூடவிருந்த நிலையில் எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் பிற்படப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் முத்தரப்பு ஆலோசனை சமவாயம் இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், 1994 இல் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை நிறுவப்பட்டது.