மேல் மாகாண பாடசாலைகளுக்கு CD மூலம் பரீட்சை வினாத்தாள்

மேல் மாகாண பாடசாலைகளுக்கு CD மூலம் பரீட்சை வினாத்தாள்

மேல் மாகாண பாடசாலைகளில்  மூன்றாம் தவணை பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் இறுவட்டுக்கள் (CD) மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 
இவ்வாறாக இறுவட்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களை அச்சிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
பாடசாலைகளில் தற்போது மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இடம்பெறுகின்றன.  இந்தச் சூழ்நிலையில் மேல் மாகாண கல்வி அமைச்சினால் தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கு இறுதித் தவணை பரீட்சை நடத்துவதற்கான வினாத்தாள்கள் இறுவட்டுக்கள் மூலம் கடந்த 16ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை அச்சிட சென்றால் அதிக கட்டணம் அறவிடப்படுகின்றது அத்துடன்  அச்சிடுவதற்கான காகிதமும் இல்லை. சரியான பிரச்சினையாக உள்ளது. இந்த விடயத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டியிருந்தது. மேல் மாகாண கல்வி அமைச்சு கவனயீனமாக  செயற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
 
நாடு முழுவதும் பரீட்சை வினாத்தாள்களுக்கான காகிதங்களுக்கு தட்டுப்பாடு இருக்கின்ற சந்தர்ப்பத்தில், அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடு இல்லாததன் காரணமாகவே இந்த காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தோடு அதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனத்தில் எடுத்து செயற்படவில்லை. இதனா் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 
உடனடியாக இதற்கான மாற்று வழி ஒன்று தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த வினாத்தாள்களை அச்சிடுவதற்கான நடவடிக்கைக்கு எடுக்கு வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image