நாட்டில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று

நாட்டில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று

நாட்டில் அடையாளங்காணப்பட்டுள்ள கொவிட் தொற்றாளர்களில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் என்று சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் படவந்துடாவ கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர் அடையாளங்காணப்பட்டு சுமார் 2 மாதங்கள் கடந்துள்ளன. தற்போதுதான் தரவுகளுக்கமைய ஒமிக்ரோன் 95 வீதம் பரவியுள்ளமை தெரிய வந்துள்ளது. gene sequence பரிசோதனை செய்யப்பட்டபோது இவ்விடயம் தெரியவந்துள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கலகத்தில்தான் தொடர்ச்சியாக இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்திலும் அறிக்கைகள் கிடைக்கின்றன. அவர்களுடைய MRI அறிக்கையொன்று நேற்று வௌியாகியது அதிலும் 96 வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நான் நினைக்கிறேன் ஜயவர்தனபுர மற்றும் MRI ஆய்வுகூடம் ஆகியவற்றில் ஒரே மாதிரியான தரவுகள் தான் உள்ளன. வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள 95 வீதமானவர்களில் அதிகமானவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image