6 முதல் 9 வரையான தரங்களை ஆரம்பிக்கும் காலம் கல்வி அமைச்சரால் அறிவிப்பு

6 முதல் 9 வரையான தரங்களை ஆரம்பிக்கும் காலம் கல்வி அமைச்சரால் அறிவிப்பு

பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள 6 முதல் 9 வரையான தரங்களை ஆரம்பிக்கும் காலம் கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (15) இடம்பெறும் வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப பிரிவுகள் மற்றும் 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image