விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள பட்டதாரிகளுக்கு 5 மில். ரூபா வரை கடன்

விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள பட்டதாரிகளுக்கு 5 மில். ரூபா வரை கடன்

​வேலையற்ற பட்டதாரிகள் விவசாயம் தொடர்பான உற்பத்திகளை மேற்கொள்ள 1.5 மில்லியன் தொடக்கம் 5 மில்லியன் ரூபா வரையில் கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயம் தொடர்பான உற்பத்தி வியாபாரத்தை கொண்டு நடத்துவதற்கு உகந்த வகையில் வெற்றிகரமான திட்டங்களை சமர்ப்பித்தோருக்கு இக்கடன் வசதி வழங்கப்படவுள்ளது.

குறித்த உற்பத்திகளை ஏற்றுமதிச் சந்தைக்கு பயன்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய, சிறுபோக உற்பத்திப்பயிர்களான கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கிராம்பு, பட்டை மற்றும் வெற்றிலை உற்பத்திகளுக்கு இக்கடன் வழங்கப்படவுள்ளதாக அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் ஜனக்க விக்கும்புர தெரிவித்துள்ளார்.

 6.9 சதவீத வட்டியுடன் இக்கடன் உதவி வழங்கப்படுகிறது. பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கப்படும். முதற்கட்டமா 250 பட்டதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள். மேலும் முதற்கட்டத்தில் 1000 பட்டதாரிகளை தொழில்முனைவோராக மாற்றுவதே திட்டம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சேதனப் பசளை பயன்படுத்துவோருக்கு 5 மில்லியன் ரூபா வரை 4 வீத வட்டிக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Celon Today

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image