397 கணித பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம்

397 கணித பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம்

397 கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற அதேவேளை,

கிழக்கு மாகாணத்தில் கணித பாடம் தவிர்ந்த ஏனைய பாடங்களுக்கான அதிகூடிய 397ஆசிரியர்கள் கல்முனை கல்வி வலயத்தில் மேலதிகமாக இருக்கிறார்கள். எனவே இதனை சமப்படுத்துமாறு ஆளுநர் செயலாளரூடாக தனக்கு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, படுவான்கரை, றாணமடு இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் 397 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான ஆசிரியர்களுக்கு வலயம் சார்ந்த பற்றாக்குறை நிலவுகின்றது.

 

தேவையான தொழில் உலகத்தை நோக்கிய பயணம் எம்மிடையே குறைவு. இன்று உலகில் தொழில் நுட்ப ரீதியான மாற்றங்கள் படுவகமாக நடந்து கொண்டு வருகின்றன. ஒரு வகையில் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமும் எம்மிடம் உள்ள குறைபாடு தான்.

எனவே எதிர்காலத்தில் உயர்தர கணித விஞ்ஞான பாடங்களில் மாணவர்கள் கற்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக சம்மாந்துறை வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் கல்முனை வலயத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிக கூடிய மிகையான ஆசிரியர்கள் இருக்கின்றனர். அந்த கல்வி வலயத்தில் 397 ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்கின்றனர். உலக வங்கி மற்றும் ஏனைய திட்டங்கள் மற்றும் கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கைகளின் படி கல்முனை வலயத்திலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள், கேள்விகள் வருகின்றன. இதனை சீர்செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளரூடாக எனக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பாடசாலையாலும் வலயத்தாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

விழாவில் வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் அமீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் உரையாற்றினர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image