ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்காக கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை முன்னிட்டு தேர்தல் கடமைகளுக்காக பங்குப்பற்றும் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களுக்காக விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 19,21ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை-காங்கேசன்துறை வரையில் விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளது. இன்று காலை 09 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை புகையிரத நிலையம் நோக்கி விசேட புகையிரதம் பயணிக்கவுள்ளது.
அதேபோல் சனிக்கிழமை (21), மற்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி விசேட புகையிரதம் புறப்படும்.