பதவி நிலைகளுக்கு ஏற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

பதவி நிலைகளுக்கு ஏற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச பணியாளர்களதும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
பொதுச் சேவைத் துறையினரின் சம்பள பிரச்சினைகள் தொடர்பான நிபுணர்கள் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
இதன்படி 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடைநிலை அரச பணியாளர்களின் அடிப்படை சம்பளம் 24 சதவீதத்தினாலும், உயர்நிலையில் உள்ள அரச பணியாளர்களின் சம்பளம் அவர்களின் தகுதிகளுக்கு அமைய 24 முதல் 50 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது. 
 
அதேநேரம் நிலவும் பணவீக்கத் தன்மை மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, 2025 ஜனவரி முதல் அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக உதய செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image