தனியார்துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தில் திருத்தம்

தனியார்துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தில் திருத்தம்

தனியார் துறை வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியார் துறை வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை 17 500 ரூபா வரைக்கும், தேசிய குறைந்த பட்ச நாட்சம்பளத்தினை  700 ரூபா வரை அதிகரிக்கக்கூடிய வகையில் 2016ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு 2024-03-25 திகதிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்துக்கு அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image