பொது சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினை குறித்து சுகாதார அமைச்சர் அவதானம்

பொது சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினை குறித்து சுகாதார அமைச்சர் அவதானம்
பொது சுகாதார பரிசோதகர்களின் தொழில்சார் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில், சுகாதார அமைச்சில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
 

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கிடைத்த சாதகமான பதில்கள் காரணமாக. டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை என குறிப்பிட்ட அமைச்சர், பொது சுகாதார பரிசோதகர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்த சில உயர் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடப்பட்டதன்படி, விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில், நாட்டின் பல பாகங்களில் தலை தூக்கியுள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் தயாராக உள்ளதாகவும் குறிப்பிப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image