முக்கிய பணிகளில் இருந்து விலக தயாராகும் ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்!
கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால், சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கமல் கித்சிறி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டை இலக்கு வைத்து சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும், இதுவரையில் தமது கொடுப்பனவு குறித்து எவ்வித தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவில்லை.
அனைத்து தரப்பினருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆனால் உயர் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படுகின்ற போதிலும், ஏனையோருக்கான கொடுப்பனவை வழங்காமையினாலேயே தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமது கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி குறிப்பிட்டுள்ளார்.
மூலம் - சூரியன் செய்திகள்