கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்பக் கோரிக்கை!

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்பக் கோரிக்கை!
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஹட்டன் அலுவலகத்தில் இது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய கோவையொன்றை மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 350 குடும்பங்களுக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் நுவரெலியா மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் 3500,4500,6700,7500 மற்றும் 10000 குடும்பங்களுக்கு தலா ஒரு கிராம உத்தியோகத்தர் மாத்திரமே பணியாற்றுகின்றார்.

இதன் காரணமாக, பொதுமக்களின் சேவைகளில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்த கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த பாகுபாடுகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மலையக மக்கள் சக்தியின் குழுவினர் கோரியுள்ளனர்.

அதேநேரம் இந்த விடயம் குறித்து மலையக அரசியல்வாதிகளும் செயற்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image