சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் இன்று உணவு இடைவேளையில் போராட்டம்

சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் இன்று உணவு இடைவேளையில் போராட்டம்
26 தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து தொழிற்சங்க நடவடிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளன.
 
ரூபா 20,000 கொடுப்பனவு அல்லது சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான ஒன்றிணைந்த போராட்ட நடவடிக்கை இன்று (30) மதியம் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் முன்பாக முன்னெடுக்க  திட்டமிடப்பட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண அரசு சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
வேலை செய்யும் மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த  மக்களுக்கும் தற்போது வாழ்க்கை வாழ்வது  தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொடுப்பனவு அல்லது சம்பள உயர்வை வழங்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.
 
 குறித்த தொழிற்சங்கங்கள் கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் ஒன்றுகூடி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய,
 
  • அனைத்து ஊழியர்களுக்கும் 20000 ரூபாய் கொடுப்பனவு அல்லது சம்பள உயர்வு உயர்வை பெற்றுக் கொள்வதில் வெற்றிபெறல்.
  • 2016 வரவு-செலவுத் திட்ட யோசனையில் நீக்கப்பட்ட பூரண ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை மீண்டும் வென்றெடுத்தல்.
 
ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு இன்று (30) மதியம் 12 மணி முதல் ஒரு மணி வரையில் உணவு இடைவேளையின் போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அகில இலங்கை அரச முகாமைத்துவ உதவி  உத்தியோகத்தர்கள் சங்கம்
 
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம்
 
தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கம்
 
இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் 
 
மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம்
 
அரச முகாமைத்துவ சேவை பெண் உத்தியோகத்தர் சங்கம்
 
அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம் 
 
சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கம்
 
முற்போக்கு முகாமைத்துவ  சேவை உத்தியோகத்தர் சங்கம் 
 
அகில இலங்கை விவசாய ஆலோசகர்கள் தொழிற்சங்க சம்மேளனம்
 
அகில இலங்கை உள்ளூராட்சி மன்ற பொது உத்தியோகத்தர் சங்கம் 
 
இலங்கை முற்போக்கு கிராம உத்தியோகத்தர் சங்கம்
 
அரச சேவை தேசிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் 
 
மத்திய அரச விவசாய ஆலோசகர் சங்கம்
 
வட மத்திய மாகாண விவசாய ஆலோசகர் சங்கம் 
 
வடக்கு மாகாண விவசாய ஆலோசகர் சங்கம்
 
கிழக்கு மாகாண விவசாய ஆலோசகர் சங்கம் 
 
ஊவா மகாண விவசாய ஆலோசகர் சங்கம்
 
சப்ரகமுவ மாகாண விவசாய ஆலோசகர் சங்கம்
 
மத்திய மாகாண விவசாய ஆலோசகர் சங்கம்
 
தென்மாகாண விவசாய ஆலோசகர் சங்கம்
 
விதாதா துறை இணைப்பாளர் சங்கம் 
 
அபிவிருத்தி துறை உதவி உத்தியோகத்தர் சங்கம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image