நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம்  (Online Safety Bill) ​நேற்று (03) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கெதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் உள்ள சில விதிகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பிற அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கு எண் SC/ SD/ 66/ 2023 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிரான முதல் மனுவாகும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image