விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டு வௌியேறுவதை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை

விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டு வௌியேறுவதை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை

கடந்த 6 மாதங்களில் 600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் சுமார் 6000 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், அரச பல்கலைக்கழக முறைமையும் படிப்படியாக நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தரவுகளுக்கு அமைய பல்கலைக்கழக கட்டமைப்பில் 11,900 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். எனினும் தற்போது சுமார் 6300 பேர் இருக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் ஆகும்போது உத்தியோகபட்டற்ற வகையில் ஆறு மாதங்களுக்குள் 600 இற்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு சென்றுள்ளனர். இது இலங்கையின் கல்வித்துறைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு செல்வதற்கு என்ன காரணம்?

எமது சம்பளத்தின் பெறுமதி படிப்படியாக குறைந்தது. 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து அரசாங்கம் விதித்த அதிக வரியும் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஒரு காரணமாகும். அரசாங்கம் விரைவாக தலையீடு செய்து ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தெளிவற்ற தன்மை நிலவுகின்றமே புத்திஜீவிகள் வெளியேறுகின்றமைக்கு காரணமாகும். விரைவில் நாட்டை வழமைக்கு கொண்டுவர முடியாது என்பதை நாம் அறிவோம். எனினும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாட்டை வழமைக்கு கொண்டுவர முடியும் என்ற சாதகமான எதிர்பார்ப்பை நாட்டின் தலைவரால் வழங்க முடியுமாயின் இவ்வாறானவர்கள் நாட்டை விட்டு நாட்டை விட்டு செல்ல மாட்டார்கள் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image