மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஐ.நா. அறிக்கையாளர்

மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஐ.நா. அறிக்கையாளர்

இலங்கையின் மலையக தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் தற்கால அடிமைத்தனம் குறித்த விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

மலையக மக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபயணமொன்று ஜூலை மாதம் முதல் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள அவர் மலையக தமிழ் மக்களிற்கு எதிரான திட்டமிடப்பட்ட பாரபட்சத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டு;ம் என இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் எனவும்தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் கல்வி, கௌவரமான தொழில், போதுமான வீட்டுவசதி, நிலம் மற்றும் பொதுவசதிகளை  பெறுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். தற்காலிக அடிமைத்தனத்தில் அவர்கள் சிக்குப்படுவதை தடுப்பதற்காக பொதுவிவகாரங்களில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image