நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மலையகம் 200 நடைபயணம்

நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மலையகம் 200 நடைபயணம்

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூரும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்டத்தில்  இன்று (12) சனிக்கிழமை நடைபவனிநடைபெற்றது. 

காலை 10 மணிக்கு நுவரெலியா - கண்டி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மும்மத வழிபாட்டுடன் ஆரம்பமாகி,  நுவரெலியா - கண்டி வீதி, புதிய கடை வீதி, தர்மபால சந்தி, நானுஓயா, ரதல்ல, லிந்துலை வழியாக தலவாக்கலை நகரத்தை சென்றடைந்தது.

இந்த பேரணியில் நுவரெலியா, உடபுசல்லாவ, இராகலை, கந்தப்பளை, ஹைபொரஸ்ட், கோணபிடிய, லபுக்கலை உட்பட பல தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டு தேசிய கொடி மற்றும் பதாதைகள் ஏந்திய வண்ணம் உரிமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியிருந்தனர். 

இதேவேளை ஹட்டன் மல்லிகைபூ சந்தியிலிருந்து ஆரம்பமான நடைபவனிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், கட்சியின் பிரதி தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் அகியோர் தலைமைதாங்கினர்.

ஹட்டன், மல்லிகைபூ சந்தியில் இன்று காலை ஆரம்பமான நடைபவனி கொட்டக்கலை பத்தனை வழியாக தலவாக்கலை நகரை சென்றடைந்தது.

இந்த நடைபவனியில் ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், பொகவந்தலாவ, கினிகத்தேன, கொட்டக்கலை, வட்டக்கொட, கொட்டக்கலை உட்பட பல பிரதேச தோட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image